search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை சீரமைப்பு பணி"

    • சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
    • இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

    அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையில் மழை காலங்களில் தேங்காப்பட்டணம் பனங்கால் முக்கு பகுதியில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழயாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இப்பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அவர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில் தேங்காய்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் சாலையை உயர்த்தி சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் சாலையை உயர்த்தி தார் போடும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முஞ்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெகுபதி, தேங்காப்பட்டணம் கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் அலி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் ஷேக்முகமது, அசோகன், சசிதரன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நாகர்கோவில் மாநகராட்சியை இந்தியாவிலேயே முதல் நிலை மாநகராட்சியாக மாற்றுவதற்கு முயற்சி என அறிவிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் 8-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளி விளை மேலத்தெருகரை பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் பழுதான சாலைகள் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் 274 சாலைகளை சீரமைக்க ரூ.68½ கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நிதி கிடைக்கப் பெற்றதும் அந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியை இந்தியாவிலேயே முதல் நிலை மாநகராட்சியாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில் என்ஜினியர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சேகர் ,வட்டச் செயலாளர் சங்கர், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேர்கிளம்பி பேரூராட்சியில் முண்ட விளை முதல் செங்கோடி வரை உள்ள சாலையானது சேதமடைந்து காணப்பட்டது.
    • இந்த சாலை சீரமைப்பு பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார்

    திருவட்டார்:

    வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட முண்ட விளை முதல் செங்கோடி வரை சுமார் 3 கிலோமீட்டர் அளவில் சாலை உள்ளது. இந்த சாலையானது சேதமடைந்து குண்டும் குளியுமாக காணப்பட்டது.

    இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் அந்த பாதையில் சென்று வர சிரமப்பட்டார்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர்ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர் அந்த கோரிக்கையை பேரூராட்சி மன்றத்தில் ஒப்பதல் பெற்று நிதி ஒதுக்கினார்.


    தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணியை வேர்கிளம்பி பேரூராட்சி மன்ற தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. ரெகுகுமார், பேரூராட்சி துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல், வார்டு உறுப்பினர் சுந்தர் சிங், மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேப்பந்தட்டை அருகே தார்சாலையை சீரமைக்க சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரில் இருந்து பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கொட்டாரக்குன்றுக்கு சுமார் 8 கி.மீ தார் சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த சில மாதங்களாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்த தார்சாலையை சீரமைக்க சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    விழாவிற்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்து பேசும் போது, இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மலைவாழ் மக்கள் என்பதால் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்படுகிறது. தற்போது இந்த சாலை பழுதடைந்துள்ளது தெரிந்தவுடன் சாலை சீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் தொடங்கியுள்ளது, இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் இந்த சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து எளிமையாக்கப்படும் என்றார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவைத்தலைவர் துரை, இணை செயலாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×